கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும் , மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு ஜெய்நகரில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் குமாரசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , இன்று அதிகாலை 3.40 மணியளவில் குமாரசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டார்.
அப்போது அவர் மிகவும் பலவீனமாகவும், அசௌகரியத்துடன் இருந்தார்.உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்ட்டது. சிகிச்சைக்கு குமாரசாமி நன்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்.