இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், இருதரப்பு இராணுவ உறவுகளையும் வலுப்படுத்துவதற்காகவே இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு செல்லவுள்ளார் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் கடற்படைக் கப்பல்கள் மற்றும் ‘உளவு’ கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களில் நிறுத்தப்படுவதை தொடர்ந்தே அவரின் இந்த பயணம் ஒழுங்குச் செய்யப்பட்டுள்ளது என குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்நிலையில் ராஜ்நாத்சிங் எதிர்வரும் செப்டம்பர் 2,3 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க உள்ளார்.
மேலும், இருதரப்பு இராணுவ திறனை வளர்ப்பதில் இலங்கை ஆயுதப் படைகளுக்கு உதவ இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று குறிப்பிட்ட ஒரு இந்திய அதிகாரி ஒருவர், இதற்காக இந்தியா 150 மில்லியன் டொலர் பாதுகாப்புக் கடனை நீடித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த திட்டதிற்கு இதுவரை சுமார் 100 மில்லியன் டொலர்கள் மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.