நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த படம் இதுவரை சுமார் ரூ.500 கோடி வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த படம் வெளியானதை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார். அங்கு தனது ஆன்மிக பயணத்தை முடித்துக் கொண்டு உத்தரபிரதேசத்திற்கு சென்றார்.
அங்கு அந்த மாநில முதல்-மந்திரி யோகிஆதித்யநாத், எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார்.
மேலும் அங்கு துணை முதல்-மந்திரியுடன் சேர்ந்து ‘ஜெயிலர்’ படத்தையும் பார்த்தார். பிறகு அயோத்தி ராமர்கோவிலுக்கு சென்று அங்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.