Home இந்தியா ஜம்மு-காஷ்மீருக்கு எப்போது மாநில அந்தஸ்து ………..?

ஜம்மு-காஷ்மீருக்கு எப்போது மாநில அந்தஸ்து ………..?

by Jey

ஜம்மு-காஷ்மீருக்கு எப்போது மாநில அந்தஸ்து வழங்கபடும் என்பதை காலவரையிட்டு கூற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும் யூனியன் பிரதேசமாக ஜம்மு- காஷ்மீரை உருவாக்கியது தற்காலிக நடவடிக்கைதான் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னர் 2018-2023 வரை தீவிரவாத தாக்குதல்கள் 45.2 சதவீதம் குறைந்துள்ளன என்றும் மாநில அந்தஸ்து வழங்குவதற்கு முன்னதாக, ஜம்மு-காஷ்மீரை தயார் படுத்த வேண்டி உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் ஜம்மு-காஷ்மீரில் எப்போதும் தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தில் இருக்கிறது என்றும் விரைவில் பணி முடிந்து விடும் என்றும் தேர்தல் ஆணையம் தான் இனி தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

related posts