மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டாவது இடம் பிடித்து அசத்திய பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். பிரக்ஞானந்தாவுடன் அவரது பெற்றோர்களும் சென்றிருந்தனர்.
பிரக்ஞானந்தாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாக்கூர்,”நான் அவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் இந்தியாவை பெருமையடைய செய்திருக்கிறார். 16 வயதிலேயே மற்றவர்களால் செய்ய முடியாததை அவர் செய்து காட்டியிருக்கிறார். பல்வேறு இளைஞர்கள் இவரை பார்த்து செஸ் விளையாட ஆர்வம் பெறுவர். என்று தெரிவித்தார்.