ட்விட்டர் அல்லது x சமூக ஊடக கணக்குகள் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பை வழங்குவதற்கான முயற்சியில் எலன் மஸ்க், ஈடுபட்டுள்ளதாக கூறுகிறார்.
தனது கணக்கிலிருந்து, வீடியோவுடன் மற்றும் இல்லாமல் அழைப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம் வழங்கப்படுவதாக எலோன் மஸ்க், சுட்டிக்காட்டியுள்ளார்.
தொலைபேசி இயக்க முறைமைகளின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும், தொலைபேசி இலக்கமின்றி இந்த அழைப்புகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்குவதாகவும் அவர் கூறுகிறார்.
எலன் மஸ்க் ட்விட்டர் வலையமைப்பை வாங்கிய பிறகு பெரிய மாற்றங்களை அறிமுகபடுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.