பாகிஸ்தான் கடற்படையினர் ஹெலிகொப்டர் மூலம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவேளை, ஹெலிகொப்டர் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 கடற்படையினர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து பலுசிஸ்தான் மாகாணத்தின் துறைமுக நகரமான குவாதர் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. ஹெலிகொப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
விபத்து தொடர்பாக அந்நாட்டில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் இடைக்காலப் பிரதமர் அன்வாருல் ஹக் காக்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.