Home உலகம் உலகில் பருவநிலை மாற்றம் – கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீடு

உலகில் பருவநிலை மாற்றம் – கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீடு

by Jey

உலகில் பருவநிலை மாற்றம் பற்றி அவ்வப்போது, வளர்ந்த நாடுகள் மற்றும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றன. இதற்காக கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீடு செய்ய முன்வரவேண்டும் என கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

Powered By PauseUnmute Loaded: 2.32% Fullscreen இதுதவிர, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் கழிவுகள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கான காரணிகளை குறைக்க வேண்டும் என்றும் கூட்டத்தின்போது நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும், அதில் போதிய முன்னேற்றம் இல்லாத சூழல் காணப்படுகிறது.

சமீபத்தில், பருவநிலை மாற்றம் தொடர்ச்சியாக காட்டுத்தீ, வெப்ப அலை போன்றவை ஏற்பட்டு மனிதர்களில் பலர் பாதிப்புக்கு ஆளாகினர். வெப்ப அலையில் சிக்கி மனிதர்களும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தனர். ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் ஆறுகள், நீர்நிலைகள் வறண்டு போய் காணப்பட்டன.

இந்நிலையில், 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனித இனத்திற்கு ஏற்பட்ட நெருக்கடியான நிலை பற்றி சர்வதேச ஆய்வு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் பருவநிலை மாற்றம் விளைவாக ஏற்பட்ட அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளன.

இதன்படி, ரோம் நகரில் உள்ள சேபியன்சா பல்கலை கழகம் மற்றும் புளோரென்ஸ் பல்கலை கழகத்தின் நிபுணர்கள் மற்றும் பல ஆய்வாளர்கள் சேர்ந்து ஆய்வு ஒன்றில் ஈடுபட்டனர். இதுபற்றிய ஆய்வு முடிவுகள், ஜர்னல் சயின்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்டு உள்ளன.

இதன்படி, 50 வெவ்வேறு மனித இனத்தின் 3,154 தனிநபர்களின் மரபணுக்களை முழுவதும் பரிசோதனை செய்து உள்ளனர்.

related posts