Home இந்தியா புவி வட்டப்பாதையில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிற ‘ஆதித்யா எல்-1’

புவி வட்டப்பாதையில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிற ‘ஆதித்யா எல்-1’

by Jey

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) கடந்த 2-ந்தேதி ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தை விண்ணில் ஏவியது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பூமியில் இருந்து புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து ‘ஆதித்யா எல்1’ விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து சென்றது.

பின்னர் புவிவட்டப்பாதையில் தனது பயணத்தை விண்கலம் தொடர்ந்து வருகிறது. விண்கலத்தின் சுற்றுவட்டபாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

அதில் விண்கலத்தின் VELC மற்றும் SUIT கருவிகளின் புகைப்படம், நிலா மற்றும் பூமியின் புகைப்படம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

related posts