கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெற்ற 6 மாநில இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது . இந்த நிலையில், 7 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் வெற்றி நிலவரம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி, திரிபுராவில் 2 தொகுதிகள், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இந்தநிலையில், திரிபுராவில் 2 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
போக்சாநகர் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் தபஜ்ஜால் உசேன் 34146 வாக்குகள் பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட மிசான் உசைன் 3909 வாக்குகளே பெற்றார். இதன் மூலம் 30237 வாக்குகள் வித்தியாசத்தில் தபஜ்ஜால் உசேன் அபார வெற்றி பெற்றார்.