Home உலகம் அடுத்த ஆண்டுக்கான ஜி-20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம்

அடுத்த ஆண்டுக்கான ஜி-20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம்

by Jey

டெல்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு நிறைவடைந்தது. இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஜி-20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான ஜி-20 உச்சி மாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் இந்தியாவிற்கு வருகை தந்தார்.

முன்னதாக டெல்லியில் உள்ள சுவாமி நாராயன் அக்சார்தாம் வழிபாட்டுத் தலத்தில் நேற்று ரிஷி சுனக் தனது மனைவியுடன் சென்று வழிபாடு செய்தார்.

 

related posts