ரொறன்டோவில் அதிக அளவிலான போதைப் மருந்து பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரொறன்டோவின் பொதுச் சுகாதார அலுவலகம் இது பற்றி அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி முதல் அதிகளவில் அளவில் போதை மருந்துவகைகளை எடுத்துக்கொண்டதனால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் 31ம் திகதி முதல் இந்த மாதம் 6ம் திகதி வரையில் அதிகளவு போதை மருந்து உட்கொண்டதனால் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
போதை மருந்து பயன்பாட்டினால் உயிரிழக்கும் வாரந்த சராசரி எண்ணிக்கையை விடவும் இந்த வாரம் கூடுதல் மரணங்கள் பதிவாகியுள்ளன.
போதை மருந்து பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து மக்களுக்கு போதியளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமென சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.