Home கனடா கனடாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கவலை

கனடாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கவலை

by Jey

டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் இடையே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சந்தித்து பேசினர்.

அப்போது கனடாவில் தீவிரவாத சக்திகளின் இந்திய விரோத நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.

“தீவிரவாத சக்திகள் பிரிவினைவாதத்தை ஊக்குவித்து, இந்திய தூதர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுகின்றனர். தூதரகங்களை சேதப்படுத்துகின்றனர்.

கனடாவில் உள்ள இந்திய சமூகத்திற்கும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளனர்.

திட்டமிட்ட குற்றங்கள், போதைப்பொருள் கும்பல் மற்றும் மனித கடத்தல் ஆகியவற்றுடன் இந்த தீவிரவாத சக்திகளின் நடவடிக்கை கனடாவுக்கு கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.

இதுபோன்ற அச்சுறுத்தல்களை கையாள்வதில் இரு நாடுகளும் ஒத்துழைப்பது அவசியம்” என பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

related posts