Home உலகம் ஆப்பிரிக்காவில் கனமழை, பலர் மாயம்

ஆப்பிரிக்காவில் கனமழை, பலர் மாயம்

by Jey

தெற்கு ஆப்பிரிக்காவில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு லிபியா. உள்நாட்டுப்போர் நடைபெற்று வரும் லிபியாவின் கிழக்கு பகுதியை கிளர்ச்சியாளர்களும், மேற்கு பகுதியை வெளிநாட்டு ஆதரவு பெற்ற அரசும் நிர்வகித்து வருகின்றன.

இந்நிலையில், லிபியாவை டேனி புயல் தாக்கியது. மத்திய தரைக்கடல் பகுதியில் லிபியா அமைந்துள்ளதால் புயலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அந்நாட்டின் டெர்னா, பெடா, சுசா உள்பட பல்வேறு நகரங்களை புயல் தாக்கியது.

புயலுடன் கனமழையும் கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் பலர் சிக்கிக்கொண்டனர்.

புயல், கனமழை, வெள்ளப்பெருக்கில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனமழை, வெள்ளப்பெருக்கில் பலர் மாயமாகியுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

related posts