அமெரிக்க வெளியுறவுத்துறைசெய்தித்தொடர்பாளர் மாத்யு மில்லர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- இந்தியாவில் நடந்து முடிந்த ஜி-20 மாநாடு, மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அது வெற்றி என்று நிச்சயமாக நம்புகிறோம்.
முதலில், ஜி-20 பெரிய அமைப்பு. அதில் ரஷியா உறுப்பினராக இருக்கிறது. சீனா உறுப்பினராக இருக்கிறது. பல நாடுகள் மாறுபட்ட கருத்துகள் கொண்டுள்ளன.
இருப்பினும், பிற நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் மதிக்க வேண்டும் என்றும், அதை மீறக்கூடாது என்றும் அழைப்பு விடுக்கும் அறிக்கையை ஜி-20 அமைப்பால் வெளியிட முடிந்துள்ளது.
அந்த அறிக்கை முக்கியமானது, மைல்கல். ஏனென்றால், உக்ரைனை ஆக்கிரமித்த ரஷியாவின் மனதில் அந்த எண்ணம் இருக்கிறது.
மேலும், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் அறிவிக்கப்பட்டதையும் வரவேற்கிறோம்.
இந்த வழித்தடம், ஐரோப்பாவையும், ஆசியாவையும் இணைக்கும் புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அமையும். ஐரோப்பா, ஆசியா ஆகிய 2 கண்டங்களில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.