Home இந்தியா ஆவின் நெய் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் – சீமான்

ஆவின் நெய் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் – சீமான்

by Jey

நிர்வாகத் திறமையின்மை மற்றும் முறைகேடுகள் காரணமாக ஏற்பட்டுள்ள ஆவின் நிறுவன நட்டத்தை ஈடுகட்டும் பொருட்டு ஏழை எளிய மக்கள் தலையில் கூடுதல் சுமையை ஏற்றும் செயல்களைக் கைவிட்டு, உயர்த்தப்பட்ட ஆவின் நெய் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

ஒன்றரை ஆண்டுகளில் நான்காவது முறையாக ஆவின் நெய் விற்பனை விலையை ரூ.115 அளவிற்கு திமுக அரசு உயர்த்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆவின் பால் பொருட்களின் விலையை வாங்க முடியாத அளவிற்கு திமுக அரசு மீண்டும், மீண்டும் கடுமையாக உயர்த்துவதென்பது சிறிதும் மனச்சான்றற்ற கொடுஞ்செயலாகும்.

related posts