Home இந்தியா இந்தியாவில் 26 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை

இந்தியாவில் 26 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை

by Jey

இந்தியாவில் 26 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியை சேர்ந்தவர் கோபால் பட்டாச்சாரியா. இவர் மத்திய ரிசர்வ் பொலிஸ் பாதுகாப்பு படையில் தலைமை காவலராக உள்ளார்.

இவரது மனைவி சர்ஜூ தேவி (வயது 25). இவருக்கு அண்மையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் ஒவ்வொரு கையிலும் 7 விரல்கள் மற்றும் ஒவ்வொரு காலிலும் 6 விரல்கள் என மொத்தம் 26 விரல்கள் இருந்தது.

இதனால் அந்த குழந்தை தேவியின் அவதாரமாக கருதி அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தைக்கு 26 விரல்கள் இருப்பது அரிதானது.

related posts