கனடிய பிரஜையும் சீக்கிய மதத் தலைவருமான ஹார்டிப் சிங் படுகொலையுடன் இந்திய புலனாய்வுப் பிரிவு தொடர்பு பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவில் சீக்கிய தலைவரின் கொலையுடன் இந்தியாவிற்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கோடை காலத்தின் பின்னர் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமான நிலையில், கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
வான்கூவாரில் நிஜார் என்னும் சீக்கிய தலைவர் கடந்த ஜூன் மாதம் சீக்கிய ஆலயத்திற்கு எதிரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் இந்திய புலனாய்வுப் பிரிவு செயற்பட்டுள்ளமைக்கான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
கொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் இந்திய ராஜதந்திரியை கனடா நாடு கடத்தியுள்ளது.
இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்படும் என பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
படுகொலை குறித்து வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜொலியும் கடும் கண்டனத்தை நாடாளுமன்றில் வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையில் ராஜதந்திர முரண்பாட்டை உருவாக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.