ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசு முற்படுமானால் நாட்டில் நிர்வாகக்கட்டமைப்பு முழுமையாக சீர்குலையும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் சட்டத்துறை பேராசிரியருமான ஜி.எல்.பீரிஸ் எச்சரித்துள்ளார்.
மேலும் சர்வதேச மட்டத்தில் எந்தவொரு சட்டப்பூர்வமான நகர்வுகளிலும் ஈடுபடமுடியாமல்போகும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க இடமளிக்கமாட்டோம். தேசிய ரீதியில் போராட்டங்கள் நடத்தப்படும் என்பதுடன், சர்வதேசத்தையும் நாடுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.