யாழ். மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகியவற்றின் வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இப்போராட்டமானது இன்றைய தினம் (21.09.2023) மதியம் 12 மணி முதல் 1 மணி வரையில் யாழ். வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் புத்திஜீவிகள் வெளியேறுவதை தடுப்பதிலும், அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு உள்ள தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதனையும் நோக்காக கொண்டே குறித்த போராட்டம் முனனெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது