Home உலகம் நாங்கள் கனடா அரசின் பிரநிதிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் -வெள்ளை மாளிகை

நாங்கள் கனடா அரசின் பிரநிதிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் -வெள்ளை மாளிகை

by Jey

கனடா மற்றும் இந்திய அரசுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கடந்த ஜீன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜர் துப்பாக்கியால் சுட்டுகொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசாங்கத்தின் உளவாளிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பேசினர்.

இவ்வாறான நிலையில் குறித்த விவகாரத்தில் அமெரிக்க அரசின் நிலைப்பாடு குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜேக் சல்லிவான் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

“நாங்கள் கனடா அரசின் பிரநிதிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். மேலும் நாங்கள் இந்திய அரசாங்கத்துடனும் தொடர்பில் இருக்கிறோம்.

அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான உறவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்தை நான் உறுதியாக நிராகரிக்கிறேன்.

குற்றச்சாட்டுகளை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம். விரைவில் விசாரணை முன்னெடுத்துச் செல்லப்படுவதை காண விரும்புகிறோம்.” என தெரிவித்திருந்தார்.

related posts