இந்தியா – கனடா இடையேயான மோதல் போக்கினால் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், கனடா பிரதமரின் தனி பாதுகாப்புக் குழு அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது சத்தியப் பிரமாணத்தை மீறி சட்டவிரோத பணிகளைச் செய்ய விரும்பவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கார்போரல் புல்போர்ட் என்ற அந்த அதிகாரி, நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இது நிச்சயமாக திட்டமிட்டு எடுத்த முடிவு அல்ல என்று கூறியுள்ளார்.
பாதுகாப்புப் குழு அதிகாரியின் கடமைகள் என்னென்ன என்பது குறித்து சட்டங்களைப்பற்றி ஆராய்ந்த பின்பு இந்த முடிவுக்கு வந்திருப்பதாகவும் புல்போர்ட் கூறியுள்ளார்.