தென் ஆப்பிரிக்காவில் பறவைக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் கோழி இறைச்சி மற்றும் முட்டை தட்டுப்பாடு ஏற்படலாம் என தென்னாப்பிரிக்க கோழிப்பண்ணையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போது தென்னாப்பிரிக்காவை பாதித்துள்ள மிக மோசமான பறவைக் காய்ச்சல் தொற்றை அவர்கள் எதிர்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பறவைக் காய்ச்சல் மூலம் இந்த ஆண்டில் மட்டும் 5.3 மில்லியன் டொலர் பெறுமதியான 2 மில்லியன் கோழிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கோழி இறைச்சி மற்றும் முட்டை தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் விலை வேகமாக உயரக்கூடும் என்பதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆர்ஜென்டினாவில் உள்ள கடல் சிங்கங்கள் முதல் பின்லாந்தில் உள்ள நரிகள் வரை உலகெங்கிலும் உள்ள பாலூட்டிகளை இது அதிகளவில் பாதிக்கிறது.
இது மனிதர்களுக்கு எளிதில் பரவக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.