Home கனடா கனடாவில் ஸ்வான் ஆற்றுப்பகுதியில் வாகன விபத்து

கனடாவில் ஸ்வான் ஆற்றுப்பகுதியில் வாகன விபத்து

by Jey

கனடாவில் ஸ்வான் ஆற்றுப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சஸ்கட்ச்வான் பிராந்தியத்தின் எல்லை பகுதியில் ஸ்வான் ஆற்றுக்கு 19 கிலோமீட்டர் தொலைவில் 83 ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

வாகனம் குடைசாய்ந்த காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிவேகமாக வாகனம் பயணித்த காரணத்தினால் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் 42 மற்றும் 26 வயதுகளை உடைய இரண்டு பெண்களும், 37 36 மற்றும் 25 வயதுகளுடைய மூன்று ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே இவர்கள் உயிரிழந்து விட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

related posts