சென்னை எழுப்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எந்த விதமான முன்னறிவித்தலும் இன்றி ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பாரிய சிரமத்துக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் மெட்ரோ ரயில் நிலையங்களிலும், பஸ் நிலையங்களிலும் அதிக அளவிலான கூட்டம் அலை மோதியது குறிப்பிடத்தக்கது.