மத்தியப்பிரதேசத்தின் குவாலியரில் உள்ளது லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனம். இங்கு ஆண்,பெண் என பல இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு தயாரிக்கப்பட்ட உணவை நேற்று மாணவர்கள் சாப்பிட்டனர். அவர்கள் பனீர் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் திடீரென மாணவர்களின் உடல்நிலை பாதித்துள்ளது.
எனவே, சுமார் 100 மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உணவில் விஷம் கலந்துள்ளதாக சந்தேகம் ஏற்பட்டது. எனவே உணவை ஆய்வு செய்து வருகின்றனர்.