ஜப்பானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு ஜப்பானின் டோரிஷிமா தீவுக்கு அருகே உள்ளூர் நேரப்படி இன்று காலை 11 மணியளவில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோவிற்கு தெற்கே 550 கிமீ (340 மைல்) தொலைவில் பசிபிக் பெருங்கடலில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் அந்த தீவில் மக்கள் யாரும் வசிக்கவில்லை என்பதால் உயிர்ச்சேதம் இருக்காது என்று நம்பப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலில் டோக்கியோவின் தெற்கே அமைந்துள்ள தொலைதூர சங்கிலி தீவுகளுக்கு 1 மீட்டர் வரை அலைகளை முன்னறிவித்தது.
இசு தீவுகளில் குறைந்தபட்சம் 30 செ.மீ உயரம் கொண்ட சுனாமி அலைகள் காணப்பட்டன. மேலும் கரையோரப் பகுதிகள் மற்றும் ஆற்றின் முகத்துவாரங்களுக்கு அருகில் உள்ள மக்கள் உயரமான பகுதிகளுக்கு பின்வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.