டொரன்டோவில் வீடு விற்பனையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது வீடு விற்பனையானது 7.1 வீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
மேலும் கடந்த மாதம் 4642 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டொரன்டோ பிராந்திய வளைய ரியல் எஸ்டேட் சபை இத்தகவலை வெளியிட்டுள்ளது.
கடன் வட்டி வீத அதிகரிப்பு, உயர்ந்த பணவீக்க வீதம், கனடிய மத்திய வங்கியின் எதிர்காலத் தீர்மானங்கள் குறித்த நிச்சயமற்றத்தன்மை போன்ற காரணிகளினால் இவ்வாறு வீட்டு விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.