இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள, 26 வார வேலைக்கு $100,000 மிகப்பெரிய சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளி அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான விவேக் ராமசாமி தனது இரண்டு குழந்தைளை பராமரிக்க ஒரு ஆயாவை தேடுகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
EstateJobs.com என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த வேலைக்கு, 26 வார வேலைக்கு $100,000 மிகப்பெரிய சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்திய மதிப்பில் ரூ. 83 லட்சத்திற்கும் அதிகமாகும். தனியார் சமையல்காரர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பிற வீட்டுப் பணியாளர்களைத் தேடுவதற்காக பணக்காரர்களால் பதிவிடப்பட்ட வேலைகளை EstateJobs இணையதளம் பட்டியலிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.