உலகின் பரபரப்பான வர்த்தக பாதைகளுள் ஒன்றான தென்சீனக்கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
தென்சீனக்கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் படகுகள் சீன கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.
இது குறித்து பிலிப்பைன்ஸ் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கில்பர்டோ தெரிவிக்கையில், ‘தென் சீனக்கடல் பகுதியில் சீனாவின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளுக்கு பதிலளிக்க பிலிப்பைன்ஸ் தயாராகவுள்ளது’ என எச்சரித்துள்ளார்.