Home இலங்கை மகிந்த ராஜபக்ச தரப்பினரையே காப்பாற்ற முயல்கின்றார் ரணில் -கலாநிதி கீத பொன்கலன்

மகிந்த ராஜபக்ச தரப்பினரையே காப்பாற்ற முயல்கின்றார் ரணில் -கலாநிதி கீத பொன்கலன்

by Jey

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்படுமானால் அதில் எனக்கு ஒரு உடன்பாடு இல்லை அமெரிக்காவின் சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.

எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நீதிபதி சரவணராஜாவின் முடிவு சரியானது என்றே நான் நினைக்கின்றேன் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, சர்வதேச விசாரணை தொடர்பில் ஜேர்மனியில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு ஜனாதிபதி மிகவும் ஆவேசப்பட்டு பதில் அளித்துள்ள விடயம் தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

சனல் 4 விவகாரம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க காப்பாற்ற நினைப்பது பிள்ளையானையோ, வேறு எவரையுமோ அல்ல. அவர் மகிந்த ராஜபக்ச தரப்பினரையே காப்பாற்ற முயல்கின்றார் என பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலன் குறிப்பிட்டார்.

 

 

 

 

 

 

 

related posts