ஜம்மு காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் முகாம் ஒன்று உள்ளது. நேற்று காலை வழக்கம் போல் முகாமில் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ராணுவத்தின் முக்கிய பணியில் இருக்கும் அதிகாரி ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தார்.
இதனால் சக வீரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடினர்.
திடீரென கையெறி குண்டுகளையும் தூக்கி வீச ஆரம்பித்தார்.
இதில் உயர் அதிகாரிகள் 3 பேரும், ராணுவ வீரர்கள் 5 பேரும் காயமடைந்துள்ளனர்.