ஆசிய சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல்- பாலஸ்தீன ஹமாஸுக்கு இடையேயான தற்போதைய யுத்தத்தின் காரணமாக மசகு எண்ணெய் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆசிய சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி ஆசிய சந்தையில் தற்போது மசகு எண்ணெய் விலை 4 டொலர்கள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 88.39 (£70) அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை, பிரென்ட் (Brent) சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 86.65 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.