இந்தியாவின் அரண் தமிழர்கள் தான். இனியாவது எங்களுக்காக குரல் கொடுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
யாழ். தாவடி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு நீதிபதி எமது நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்றார். ஒரு நாட்டினை விட்டு நீதிபதி வெளியேறுகின்றார் என்றால் சாதாரண மக்களுக்கு எவ்வாறு நீதி கிடைக்கப் போகின்றது.
இந்த விடயம் தொடர்பான முழு பொறுப்பினையும் இந்த அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அரசாங்கமோ அல்லது நீதி அமைச்சோ இதுவரை இதற்கு காரணமாக இருக்கின்ற தரப்பிற்க்கு எதிராகவும் ஒரு நடவடிக்கையை கூட முன்னெடுக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் பேசுபவர்களுக்கு பாதுகாப்பு இருக்கின்றது. எதையும் பேசலாம் ஆனால் அவர்கள் பேசுவதை அனைத்தையும் ஊடகங்களும் வெளிப்படுத்துகின்றன.