இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தனது விமானம் தாங்கிய போர் கப்பல்களை கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் ஜெருசலேமை கைப்பற்றும் நோக்கில் இஸ்ரேல் மீது நேற்று (09.10.2023) அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான போர் விமானங்களை ஏவி தாக்குதல் நடத்த ஆரம்பித்தது.
மேலும் நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக காசா பகுதிக்கு கடத்தி சென்றமையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கமைய இஸ்ரேல் இராணுவப்படையினர் பாலஸ்தீனத்தின் மீது தொடர் வான் தாக்குதலை நடத்தி காசா நகரை உருக்குலைத்து வருகின்றனர்.