கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஐக்கிய அரபு அமீரகத்திடம் கனடா இந்திய மோதல் குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடா இந்தியா மோதல் தொடர்பில் பிரித்தானிய பிரதமருடன் விவாதித்ததைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடனும் விவாதித்துள்ளார் கனடா பிரதமர்.
கடந்த வெள்ளிக்கிழமை, கனடா இந்தியா விவகாரம் தொடர்பில் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவிடம் தொலைபேசி மூலம் பேசியிருந்தார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்.
கனடா இந்தியா மோதல் விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை பிரித்தானியா உறுதிசெய்திருந்தது. பின்னர் மீண்டும் ஞாயிற்றுகிழமை, கனடா இந்தியாவுக்கிடையிலான மோதலில் தீவிரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கனடா பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார் ரிஷி.
இன்று, ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியான உடன், தொலைபேசியில் கனடா இந்திய விவகாரம் குறித்து பேசியுள்ளார் ட்ரூடோ.
சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிப்பதன் அவசியம் குறித்து தான் அமீரக ஜனாதிபதியுடன் விவாதித்ததாக எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.