Home உலகம் ஆப்கானிஸ்தானில் மீண்டும் 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கும்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கும்

by Jey

ஆப்கானிஸ்தானில் மீண்டும் 6.1 ரிச்டர் அளவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (11.10.2023) காலை 6.11 மணியளவில் ஹெராத் மாகாணத்தின் தலைநகருக்கு வெளியே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பில் தகவல் உடனடியாக வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 10,000 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என தெரிவிக்கப்படுவதுடன், மீட்புப்பணி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.

related posts