Home இந்தியா ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் தேதி மாற்றியமைப்பு

ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் தேதி மாற்றியமைப்பு

by Jey

தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் சத்தீஷ்கார் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்து இருந்தது.

அதன்படி, மிசோரம் மாநிலத்திற்கு நவம்பர் 7ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

சத்தீஷ்கார் மாநிலத்திற்கு நவம்பர் 7 மற்றும் 17ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதேபோல், மத்தியபிரதேசத்திற்கு நவம்பர் 17ம் தேதியும், ராஜஸ்தானுக்கு நவம்பர் 23ம் தேதியும், தெலுங்கானாவுக்கு நவம்பர் 30ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

related posts