Home இலங்கை வேலை வாய்ப்பு பெற்று தருவதாக இணைய வழியில் மோசடி

வேலை வாய்ப்பு பெற்று தருவதாக இணைய வழியில் மோசடி

by Jey

இணைய வழியில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக அதிக அளவில் மோசடிகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பிரமிட் கொடுக்கல் வாங்கல் தொடர்பான மோசடிகளும் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போலியான முகநூல் கணக்கு உருவாக்கியமை, முகநூல் கணக்குகளை ஹேக் செய்தமை உள்ளிட்ட முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதத்தில் மொத்தமாக 3328 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முகநூல் தொடர்பான முறைப்பாடுகளை 101 என்ற அவசர அழைப்பு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

related posts