Home இலங்கை நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல்……

நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல்……

by Jey

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த வகையிலும் அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னாள் நீதிபதியின் திடீர் வெளிநாடுப் பயணமானது ஏற்கனவே திட்டமிடப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் பிரிவு அரசாங்கத்திடம் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 25ஆம் திகதி இந்தியா செல்வதற்காக முன்னாள் நீதிபதி விடுமுறை கோரி விண்ணப்பித்த நிலையில் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் கடந்த 24ஆம் திகதி அவர் திடீரென வேறு நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

related posts