Home இலங்கை ஒரு துளியேனும் இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அனுமதியில்லை – டக்ளஸ்

ஒரு துளியேனும் இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அனுமதியில்லை – டக்ளஸ்

by Jey

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழிலாளர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சில் இருந்து பதவி விலகல் செய்துவிட்டு வெறுமனே ஒரு நாடாளுமன்ற உறுப்பினாக இருப்பதே சிறந்தது என தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (13.10.2023) மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இந்திய இழுவைப் படகு விடயம் குறித்து பிரதமர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் எதிர்மறையான கருத்துகள் தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பிரதமர் இந்திய இழுவை படகுகளுக்கு பாஸ் அடிப்படையில் அனுமதி வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு துளியேனும் இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் அத்துமீறிய கடற்றொழில் இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது.

 

 

 

related posts