Home உலகம் மணிலாவின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம்

மணிலாவின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம்

by Jey

பிலிப்பைன்ஸ் தலைநகரம் மணிலாவின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கம் ஓரியன்டல் மீண்டோரோ மாகாணத்தில் உள்ள பியூர்டோ கலேரியா நகரில் இருந்து 31 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின இதனால், மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியே ஓடினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

related posts