Home உலகம் வடக்கு ஆப்கானிஸ்தானில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் பலி

வடக்கு ஆப்கானிஸ்தானில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் பலி

by Jey

வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழுகை நடவடிக்கைகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவத்தில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

 

related posts