Home உலகம் காசா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல்

காசா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல்

by Jey

காசா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா – இஸ்ரேல் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேல் – ஹமாஸ் போரில் காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,300 ஐ தாண்டியுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி 2,329 பலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 9,714 பேர் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் திடீர் தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 1,300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடியாக அன்றிலிருந்து காஸாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

related posts