ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல்களினால் சிக்கியிருந்த ஒரு தொகுதி கனேடியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு நாடு திரும்பிய கனேடியர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அண்மையில் இந்த கனேடியர்கள் நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனேடிய இராணுவ விமானங்கள் இந்த மீட்பு நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தது.
அடிக்கடி ரொக்கட் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும்; மக்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கி அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும் நாடு திரும்பிய கனடியர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு திரும்ப கிட்டியமைக்காக கடவுளுக்கு நன்றி கூறுவதாக மேலும் சிலர் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலில் சுமார் 5700 கனேடியர்கள் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளதுடன், இதில் 1600 பேர் நாடு திரும்புவதற்கான உதவிகளை அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.
கனேடிய வெளிவிவகார அமைச்சு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.