Home உலகம் தென் காசாவில் உள்ள மருத்துவமனையை அகற்ற இஸ்ரேல் உத்தரவு

தென் காசாவில் உள்ள மருத்துவமனையை அகற்ற இஸ்ரேல் உத்தரவு

by Jey

தென் காசாவில் உள்ள ஒரேயொரு மருத்துவமனையையும் அங்கிருந்து அகற்றுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

ரபாவில் உள்ள மருத்துவமனையிலிருந்து அனைவரையும் வெளியேறுமாறு இஸ்ரேலின் இராணுவம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவமனையில் பணிபுரியும் வைத்தியர்களை இரண்டு மணித்தியாலத்திற்குள் அங்கிருந்து வெளியேமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தொலைபேசி மூலம் உத்தரவிட்டுள்ளனர்.

இதனை தென்காசவில் உள்ள குவைத்தி மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் ஜமால் ஹம்ஸ்தெரிவித்துள்ளார்.

அந்த மருத்துவமனை பொதுமக்களிற்கு மாத்திரம் சிகிச்சை வழங்குகின்றது இஸ்ரேலின் குண்டுவீச்சில் காயமடைந்த பொதுமக்களிற்கு அங்கு சிகிச்சை வழங்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

related posts