Home உலகம் காசாவில் 84000 கர்ப்பிணிபெண்கள் ஆபத்தான நிலையில்

காசாவில் 84000 கர்ப்பிணிபெண்கள் ஆபத்தான நிலையில்

by Jey

ரபா எல்லையில் காசாவிற்கான மனிதாபிமான உதவிகள் சிக்குண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் காசாவின் 84000 கர்ப்பிணிபெண்கள் ஆபத்தான நிலையை எதிர்கொள்கின்றனர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

காசாவிற்குள் விநியோகங்களை கொண்டுவர முடியாததால் 84000 கர்ப்பிணிகளின் உயிர்களிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என உலக சுகாதார ஸ்தாபனம் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளது.

ரபா எல்லையின் எகிப்திய பக்கத்தில் மூன்று இலட்சம் மக்களிற்கு போதுமான அடிப்படை பொருட்கள் சிக்குண்ட நிலையில் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் அத் தரைவழிப்பாதையை திறப்பது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் எகிப்துடன் இணக்கப்பாட்டிற்கு வந்த போதிலும் இஸ்ரேலின் விமானக்குண்டுவீச்சுக்கள் அதனை சாத்தியமற்றதாக்கியுள்ளன.

 

 

 

 

 

 

related posts