ரொறன்ரோ பகுதிகளில் கார் கொள்ளையைத் தடுக்க விசேட செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் வாகனக் கொள்ளைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
ரொறன்ரோ பொலிஸாரும், ஒன்றாரியோ மாகாண பொலிஸாரும்; இணைந்து இந்த விசேட செயலணியை உருவாக்கியுள்ளனர்.
கார் உள்ளிட்ட வாகனங்கள் கொள்ளையிடப்படுவதனை தடுக்கும் நோக்கில் மாகாண கார் கொள்ளை தடுப்பு செயலணி என்ற பெயரில் இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.