மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் மூன்று மாணவர்கள் இணைந்து பாக்கு நீரிணையை நீந்தி கடக்கவுள்ளதாக கல்லூரியின் அதிபர் அன்ரன் பெனடிக் ஜோசப் தெரிவித்துள்ளார்.
புனித மைக்கேல் கல்லூரியில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்ட கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனித மிக்கேல் கல்லூரியின் 150 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கடலில் பிளாஸ்டிக் பொருட்கள் கலப்பதை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
புளோரிங்டன் டயன்ஸ்ரித், புளோரிங்டன் டயன் பிறிடோ மற்றும் இருதயநாதன் கெல்வின் கிசோ ஆகிய மூவரே இந்த சாதனையை நிலைநாட்டவுள்ளனர்.