கடந்த 77 ஆம் திகதி தொடங்கிய இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே இடம்பெற்றுவரும் போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.
பாலஸ்தீனத்தில் போரினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஐஸ்கிரீம் வண்டிகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றமை உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காஸாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், அப்பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இஸ்ரேலின் தாக்குதலினால் இதுவரை 2,600க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் லட்சக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதனால் அங்குள்ள வைத்தியசாலை நோயாளர்களால் நிரம்பி வழிவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் மருத்துவமனைகளில் உள்ள பிணவறைகள் நிரம்பியுள்ளதால் ஐஸ்கிரீம் வண்டிகளை தாம் பிணவறைகளாக மாற்றி வருவதாகவும் சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.